Mid-air collision averted at Mumbai airport: Two planes narrowly escape after their wings touch-மும்பை விமான நிலையத்தில் விமான விபத்து தவிர்ப்பு: இறக்கைகள் உரசிக்கொண்டதோடு தப்பித்த இரு விமானங்கள்

Spread the love

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை மும்பையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. அந்நேரம் ஐதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ விமானம் பார்க்கிங் பகுதிக்கு சென்றது. அந்நேரம் இரண்டு விமானங்களும் ஒன்றையொன்று லேசாக உரசிக்கொண்டன. விமானங்களின் வலது இறக்கைகள் ஒன்றையொன்று உரசிக்கொண்டன. இதில் பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் விமானங்களின் இறக்கைகள் லேசாக சேதம் அடைந்தன. இரு விமானங்களும் பார்க்கிங் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், கோயம்புத்தூர் செல்ல வேண்டிய AI2732 விமானம் புறப்பட தயாராக இருந்தபோது இரு விமானங்களின் இறக்கைகள் ஒன்றோடொன்று உரசி சேதம் அடைந்தது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழில் நுட்ப சோதனைக்காக விமானம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு வேறு விமானம் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பி விக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளது.

இதே போன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமும், விமானத்தின் இறக்கை மற்றொரு விமானத்துடன் உரசிக்கொண்டதை உறுதிபடுத்தி இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக லேசான சேதத்துடன் இரண்டு விமானங்களும் தப்பித்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *