கேரளா:
கேரளா மாநிலத்தில் உள்ள வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மண்ணில் புதைந்து சுமார் 400&க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சுமார் 200 பேரது நிலைமை என்ன ஆனது என்று இன்னும்தெரியவில்லை. அந்த பகுதியில் இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரதமர்மோடி
நிலச்சரிவு ஏற்பட்ட 2 நாளிலேயே ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வயநாடு சென்று நிலைமையை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ் சார்பில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் இன்று பிரதமர்மோடி பார்த்தார். கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணியளவில் வயநாடு புறப்பட்டார்.
நடந்து சென்றார்
அங்கு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மாலா, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய கிராமங்களில் அவர் ஹெரிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடன் மாநில முதல் அமைச்சர் பினராய் விஜயனும் உடன் சென்றார்.
நிலச்சரிவை அடுத்து கல், மண் ஆகியவற்றோடு பெருக்கெடுத்து ஓடிய இருவழிஞ்சி ஆற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். பாதிப்புகள் குறித்த புகைப்படங்களையும் டேப் மூலம் பிரதமர் மோடி பார்த்தார்.இதனையடுத்து, தரை மார்க்கமாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். வாகனத்தை விட்டு பல பகுதிகளுக்கும் நடந்து சென்று நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முழுமையா ஆய்வு செய்தார்.
வினேஷ் போகத் கோரிக்கை மனு: நாளை ஒத்திவைப்பு
ஆறுதல்
பின்னர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் தங்கள் குறைகளை கண்கலங்கியவாறு கூறியதைக் கேட்ட பிரதமர், அவர்களின் தோள்களில் தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான், முதல் அமைச்சர் பினராயி விஜயன், கேரளாவைச் சேர்ந்த மத்திய மந்திரி சுரேஷ் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அனைத்து உதவி
வயநாடு பாதிப்பு குறித்து பிரதமர்மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிப்பு சோகம் ஏற்பட்ட நாளில் இருந்து நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிச்சயம் அனைத்து உதவியையும் செய்யும்.
இன்று அங்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தேன். வான்வழி ஆய்வும் மேற்கொண்டேன்.நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை நான் நேரில் சந்தித்தேன்.
இது பல குடும்பங்களில் ஏற்படுத்திய பாதிப்பை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். நிவாரண முகாம்களுக்கும் சென்று, காயமடைந்தவர்களிடம் பேசினேன்.அனைவருக்கும், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, சாத்தியமான அனைத்து உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்த சவாலான நேரத்தில் நாங்கள் அனைவரும் கேரள மக்களுடன் நிற்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் பிரமர் மோடி பார்வையிட்ட படங்கள்