டெல்லி:
குரங்கம்மை பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து பல்வேறு நாடுகளில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
குரங்கு அம்மை பாதிப்பு
இந்த நிலையில் குரங்கம்பை பாதிப்பு இந்தியாவுக்குள்ளும் நுழைந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் உள்ளது. அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து குரங்கு அம்மை பாதிப்பு இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படும் நோயாளி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்-. பீதி அடையத் தேவை இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது குரங்கு அம்மை பாதிப்பு உள்ள ஒரு நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியாவுக்குப் பயணித்த ஒரு இளம் ஆணுக்கு அந்த நோய் இருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.
பீதி அடையத் தேவை இல்லை
அவருக்குக் குரங்கு அம்மை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த நோயாளியின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. முறையான நெறிமுறைகளுக்கு ஏற்ப இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து பீதி அடையத் தேவை இல்லை. இதுபோன்ற நிலைகளைச் சமாளிக்க நாடு முழுமையாகத் தயாராக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
குரங்கம்மை நோய் இந்தியாவுக்குள் நுழைந்து இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.