இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மை லார்ட்’ .
இப்படத்தை பாராட்டி இயக்குநர் ராம் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அதில் பேசியிருக்கும் அவர், ” தமிழ் சினிமாவில் பழக்கப்பட்ட கதையில் இருந்து வழக்கமான கதையில் இருந்து மாறுபட்டு வேறொரு கதையை எடுக்கக்கூடிய துணிச்சலும், நமக்கு பரிச்சயம் இல்லாத கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தக்கூடிய துணிச்சலும் இயக்குநர் ராஜு முருகனுக்கு இருக்கிறது.

அவரின் இன்னொரு துணிச்சலானப் படைப்பு தான் ‘மை லார்ட்’. அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும், அதிகார உச்சத்தில் இருந்து விலகி விளிம்பு நிலையில் அதல பாதாளத்தில் உள்ள ஒருவருக்கும் நடைபெறும் கதைதான் இது.
சமூகத்தின் இரு முனைகளையும் தைரியமாக சொல்லும் துணிச்சலான படைப்பு. மானுட அரசியலை இந்தப் படம் பேசுகிறது.
அயோத்தி படத்திற்கு பிறகு சசிகுமார் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.

அந்த மாற்றம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் அவரை ஒரு உறுப்பினராக இணைத்துள்ளது.
மை லார்ட்’ படத்தை இயக்கிய ராஜு முருகனுக்கும், அதில் நடித்த சசிகுமாருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.