My Lord: ” ‘அயோத்தி’ படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு.!”- சசிகுமார் | sasikumar speech at my lord movie success meet

Spread the love

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “மை லார்ட்’ .

இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று (பிப்.18) நடைபெற்றது. அதில் பேசிய சசிகுமார், “ஒரு நல்ல படம் மக்களை சென்றடைய கொஞ்சம் நேரம் எடுக்கும்.

முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது. ஆனால் நான் தைரியமாக இருந்தேன்.

ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பாக மக்களிடம் இன்னும் சென்று சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது தற்போது நடந்திருக்கிறது, எனக்கு மகிழ்ச்சி.

‘அயோத்தி’ படத்தில் நான் பார்த்த அனுபவம்தான் எனக்கு இந்த தைரியத்தைக் கொடுத்தது. அந்தப் படமும் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில்தான் கலெக்ஷனை எடுத்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *