உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உயர்தர சிகிச்சை பெற தமிழகத்தை நோக்கி படை எடுக்கிறார்கள். அதில் மதுரை நகரம் வெளிநாட்டவர்களுக்கு விருப்பமான மருத்துவ சிகிச்சை நகரமாக மாறி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு, மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பலர் மருத்துவ சிகிச்சைக்காக மதுரைக்கு வருகிறார்கள் என்கிறார்கள், அரவிந்த் கண் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா மற்றும் நாலா டெண்டல் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜே. கண்ணா பெருமான்.
டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா கூறுகையில், “மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் சுமார் 1,200 முதல் 1,500 வெளிநாட்டு நோயாளிகள் வருகிறார்கள். பெரும்பாலும் ஓமன், நைஜீரியா, புர்கினா ஃபாசோ, தான்சானியா, சியரா லியோன், பங்களாதேஷ், மாலத்தீவுகள், மலேசியா, கானா, பெனின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக நோயாளிகள் வருகிறார்கள். பிறவியிலேயே வரும் குளோக்கோமா, கண் உறை நோய்கள், கடுமையான ரெட்டினா நோய்கள் போன்ற சிக்கலான கண் பிரச்னைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.