தங்கமும் வெள்ளியும் வரலாறு காணாத விலையேற்றம் கண்டுள்ளன. பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் உள்ளது. ரியல் எஸ்டேட் முதலீடு கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் எந்த முதலீடு எதிர் காலத்தில் லாபத்தை அள்ளித்தரும் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது. இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வுதரும் நோக்கில் ‘Magic 20 Tamil’ நிறுவனம் ‘Magic Money TN Summit – Kovai Edition’ என்ற கருத்தரங்கை கோயம்புத்தூரில் நடத்த உள்ளது.
குழப்பமான சூழ்நிலையில், முதலீட்டாளர்கள் எந்தப் பாதையில் செல்ல வேண்டும், முதலீட்டு அணுகு முறையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை வழங்குவதே இந்தக் கருத்தரங்கின் நோக்கம். 2026-ல் முதலீட்டுச் சந்தை யின் போக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதுதான் இந்தக் கருத்தரங்கின் மையக்கரு.
முதலீட்டாளர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளன. ‘ithought’ நிறுவனத்தின் நிறுவனர் ஷியாம் சேகர், மிட் மற்றும் ஸ்மால்கேப் முதலீடு குறித்து பேச இருக்கிறார். ‘MF Utilities’ நிறுவனத்தின் சி.இ.ஓ கணேஷ் ராம், மியூச்சுவல் ஃபண்டு களின் எதிர்காலம் குறித்துப் பேச இருக்கிறார். பங்குச் சந்தை நிபுணர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் உளவியல் ரீதியான முதலீட்டு அணுகுமுறைகளை விளக்கவுள்ளார். மேலும், ‘Sincere Syndication’ நிறுவனத்தின் சிவராமகிருஷ்ணன், ‘அடிசியா’ சி.இ.ஓ மணிகண்டன், ‘பாரதி ஹோம்ஸ்’ நிறுவனத்தின் முனீர் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, பங்கேற்பாளர்களில் இருந்து, குலுக்கல் முறையில் 4 அதிர்ஷ்டசாலிகள் தேர்ந் தெடுக்கப்பட்டு, தலா 1 கிராம் தங்க நாணயம், 20 கிராம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சி கோயம்புத்தூர், மெர்லிஸ் ஹோட்டலில், ஃபிப்ரவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது. நிகழ்ச்சி பற்றிய விவரங்களுக்கு 81487 18103 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். https://www.theticket9.com/event/magic-money-tn-summit-kovai-edition என்ற லிங்கில் பதிவு செய்யலாம்.
முதலீட்டாளர்கள் இந்தக் கருத்தரங்கில் சரியான முதலீட்டு வழிகளை அறிந்துகொள்ளலாம் என்கிறது, ’Magic 20 Tamil’ நிறுவனம்!