சென்னை ஐஐடி பேராசிரியருக்கு தேசிய புவி அறிவியல் விருது

Iit Madras
Spread the love

புதுதில்லி:

தேசிய புவி அறிவியல் விருதுகள் 2023-ஐ குடியரசுத் தலைவர் நாளை வழங்குகிறார்

புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, இணையமைச்சர் சதீஷ் சந்திர துபே ஆகியோர் முன்னிலையில் நாளை(20ந்தேதி ) நடைபெறும் நிகழ்ச்சியில், மதிப்புமிக்க தேசிய புவி அறிவியல் விருதுகள் 2023-ஐ, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார்.

Droupadi Murmu

புவி அறிவியல் துறை

தேசிய புவி அறிவியல் விருது என்பது மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தால், புவி அறிவியல் துறையில் 1966 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மதிப்புமிக்க விருதாகும். 2009-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்த விருதுகள் தேசிய சுரங்க விருதுகள் என்று அழைக்கப்பட்டு வந்தன. தாதுப் பொருட்கள் கண்டுபிடிப்பு, வெட்டியெடுத்தல், சுரங்க தொழில்நுட்பம், தாதுப் பயன்பாடு, அடிப்படை/பயன்பாட்டு புவி அறிவியல் போன்ற, புவி அறிவியல் சார்ந்த பல்வேறு துறைகளில் தலைசிறந்த சாதனை படைத்த மற்றும் பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள் மற்றும் குழுக்களை கௌரவிப்பதே இந்த விருதின் நோக்கமாகும்.

பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம் இடஒதுக்கீட்டை பறிக்க முயல்கிறது: ராகுல் காந்தி

புவி அறிவியல் துறையின் எந்தவொரு பிரிவிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய இந்திய குடிமக்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். மத்திய சுரங்கத் துறை அமைச்சகம், ஆண்டுதோறும் 3 பிரிவுகளில் தேசிய புவி அறிவியல் விருதுகளை வழங்கி வருகிறது:

  1. வாழ்நாள் சாதனைக்கான தேசிய புவி அறிவியல் விருது
  2. தேசிய புவி அறிவியல் விருது
  3. தேசிய இளம் புவி அறிவியலாளர் விருது/

2023-ம் ஆண்டுக்கான தேசிய புவி அறிவியல் விருதுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் வரப்பெற்ற 240 விண்ணப்பங்கள் 3 கட்ட தணிக்கை முறையில் பரிசீலிக்கப்பட்டன.

சென்னை ஐஐடி பேராசிரியர்

விரிவான விவாதங்களுக்கு பிறகு, 9 தனிநபர்கள் மற்றும் 3 குழுக்கள் உட்பட 12 பேர் விருது பெற இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சென்னை ஐஐடியின் கட்டுமான பொறியியல் துறையின் பேராசிரியர் ஸ்ரீமத் திருமலா குடிமெல்லா ரகுகாந்த், நிலநடுக்கம், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு. சுனாமி போன்ற தேசிய பேரழிவுகள் சார்ந்த ஆய்வுக்காக தனிநபர் பிரிவில் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  விருது பெறுபவர்கள் முழு விபரம்:

அரசு பள்ளிகளில் இரவு காவலர்கள் விரைவில் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *