கொல்கத்தா சால்ட் லேக் நகரில் உள்ள தாரித்ரி வளாகத்தில் உள்ள இந்திய புவியியல் ஆய்வு கழகத்தில் தேசிய நிலச்சரிவு முன்எச்சரிக்கை மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி கிஷன் ரெட்டி இன்று (19.07.2024) தொடங்கிவைத்தார். மேலும் பூஷான்கேத் இணையதளம், பூஷ்கலான் செல்போன் செயலியையும் மந்திரி தொடங்கிவைத்தார்.
நிலச்சரிவு முன்எச்சரிக்கை மையம்
இதில், இந்திய புவியியல் ஆய்வு கழகத்தின் தலைமை இயக்குநர்ஜனார்த்தன் பிரசாத் மற்றும் பல்வேறு பேரிடர் மேலாண்மை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி பேசும்போது,” பேரிடர் மேலாண்மையில் இந்திய புவியியல் ஆய்வு கழகத்தின் சிக்கலான பணியை குறிப்பாக நிலச்சரிவுகளின் போது மேற்கொள்ளப்படும் பணியை பாராட்டினார்.
வளர்ச்சியடைந்த பாரதம்
இந்த அமைப்பின் உயர் அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதோடு, தேசிய நிலச்சரிவு முன்எச்சரிக்கை மையத்தை (என்எல்எப்சி) தொடங்கியிருப்பதற்கு பாராட்டுக்கள். நாட்டின் தாதுவளத் தேவை மற்றும் பேரிடர் மேலாண்மை பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். 2047 ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு ஏற்ப பணியாற்ற வேண்டும் என்றார்.