புதுடெல்லி:
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5&ந் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம்.
தேசிய நல்லாசிரியர் விருது
தேசிய நல்லசிரியர் விருதின் நோக்கம், நாட்டில் ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடுவதும், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம், கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திய ஆசிரியர்களைக் கவுரவிப்பதும் ஆகும். ஒவ்வொரு விருதுடன் தகுதிச் சான்றிதழும், ரூ.50,000 மற்றும் வெள்ளிப் பதக்கம். விருது பெற்றவர்களுக்கு வழங்கப்படும்.
இதனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருதை தேர்ந்தெடுக்கப்பட்ட 82 பேருக்கு விருது புதுடெல்லியில் நாளை(5ந்தேதி) நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்குகிறார்.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 ஆசிரியர்களில் 34 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள், 2 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவர். மேலும், உயர்கல்வியை சேர்ந்த 16 ஆசிரியர்களும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தைச் சேர்ந்த 16 ஆசிரியர்களுக்கும் விருது வழங்கப்பட உள்ளது.
தமிழக்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள்
இந்த நல்லாசிரியர்களில் தமிழகத்தை சேர்ந்த சேர்ந்த 2 பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.அவர்கள், மதுரை டி.வி.எஸ்.மேல்நிலையப்பள்ளியை சேர்ந்த முரளிதரன்ராமையா சேதுராமன், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ராஜகுப்பம் பகுதியைசேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் ஆவர்.
என்றும் ‛மார்கண்டேயன்’ ஆக இருக்க மருந்து கண்டுபிடிங்க: ரஷ்ய அதிபர் போட்ட உத்தரவால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி
இதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்களில் சேலத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி உதவி பேராசியர் ஜெயசங்கர் பிரபு, சென்னை சவீதா பல் மருத்துவனை மற்றும் கல்லுரியின் மைக்ரோ பயோலஜி த¬லை பேராசிரியர் சிமிலின் கிரிஜா ஆகியோரும் விருதுகள்பெருகிறார்கள்.
ஆசிரியர் தெருவிளக்கு கோபிநாத்
தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர் கோபிநாத் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், பாடங்களுக்கேற்ற இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் வடிவம் கொடுத்து கல்வியையும், கலையையும் ஒருசேர வளரும் தலைமுறைகளிடம் கொண்டு சேர்க்கிறார். இதுமட்டுமல்லாது, ஏற்றத்தாழ்வுகளைக் களைய அரசுப் பள்ளி மாணவர்களைப் போல் தானும் சீருடை அணிந்து வகுப்பிற்குச் செல்வது, மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க திருவள்ளுவர், பாரதியார், ஔவையார் வேடங்களில் சென்று பாடங்கள் எடுப்பது இவரது தனிச்சிறப்பு.
மேலும், ‘தெருவிளக்கு கோபிநாத்’ என்பதுதான் இவரது மற்றொரு அடையாளமாக இருக்கிறது. இதற்கு காரணம், இவர் அன்றாட வாழ்க்கையில் கூலி வேலைக்குச் செல்பவர்களும் மாலை நேரத்தில் கல்வி பெறும் வகையில் ‘தெருவிளக்கு’ என்ற இரவுப் பள்ளியை நடத்தி வருகிறார். இதில் கிட்டத்தட்ட 80 பேர் வரையிலும் கல்வி பயின்று வருகின்றனர்.
இதனைத் தவிர்த்து, பொம்மலாட்டம் நிகழ்ச்சி மூலம் பெண்கல்வி, குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மாணவர்களுக்கு நடத்தி வருகிறார். இவ்வாறு வளரும் தலைமுறைக்கான ஆசிரியராக சிறந்து விளங்கும் கோபிநாத்துக்கு, தேசிய நல்லாசிரியர் விருது என்ற மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உறவினர்கள் இதை பெரிதும் கொண்டாடி வருகின்றனர்.