இரு அணிகளும் இணைவது குறித்து சரத்பவார் மகள் சுப்ரியா சுலே கூறுகையில், ”கட்சி உடைந்த பிறகு முதல் முறையாக இரு அணிகளும் தேர்தல் கூட்டணியில் ஒன்று சேர்ந்திருக்கிறது. இது புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிக்கு மட்டும்தான். அடுத்து என்ன நடக்கிறது என்பதை பிறகு பார்க்கலாம்”என்று தெரிவித்தார்.
அஜித் பவார் பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது அங்கு இருந்த பேனரில் அஜித் பவார் மற்றும் சரத் பவார் ஆகியோரின் புகைப்படம் இருந்தது. அதனை சுட்டிக்காட்டிய நிருபர்கள் இது நிரந்தரமாக இருக்குமா என்று கேட்டனர்.
“அதற்கு உங்களது வார்த்தை உண்மையாகலாம்” என்று சரத்பவார் தெரிவித்தார்.
அஜித்பவார் கட்சியின் மாநில தலைவர் சுனில் தட்கரே அளித்த பேட்டியில், “இரு அணிகளும் இணைவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எந்த முடிவாக இருந்தாலும் இரு கட்சிகளும் இணைந்து எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். கடந்த மாதம் அதானி நிறுவனத்தின் தலைவர் கெளதம் அதானி பாராமதிக்கு வந்திருந்தார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதல் முறையாக சரத்பவாரும், அஜித்பவாரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
அதோடு இதில் சரத் பவார் தனது வீட்டில் வைத்த விருந்தில் அதானியும், அஜித் பவாரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த விருந்துக்கு பிறகுதான் புனேயில் சரத் பவார் கட்சியுடன் கூட்டணி வைக்க அஜித் பவார் சம்மதம் தெரிவித்தார். இத்தேர்தலை தொடர்ந்து எதிர்காலத்தில் இரு கட்சிகளும் ஒன்று சேரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இவ்விவகாரத்தில் சுப்ரியாவும், அஜித்பவாரும் முடிவு எடுப்பார்கள் என்று சரத்பவார் கூறிவிட்டார். ஆனாலும் கட்சியை அஜித் பவார் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.!