புதுடெல்லியில் உள்ள கிருஷி பவனில் இன்று மத்திய மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான், நியூசிலாந்து மந்திரி டோட் மெக்லே இடையேயான உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் பரஸ்பர ஆர்வம் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளின் முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்பட்டது.
ஒத்துழைப்பு
இரு நாடுகளின் வேளாண் முன்னுரிமைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் தோட்டக்கலை தொடர்பான உத்தேச ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்பட கூட்டாண்மைக்கான புதிய வழிகளை கண்டறிவது குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
மேலும் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ள விவசாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அமைச்சர்கள் வெளிப்படுத்தினர்.இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் நியூசிலாந்தின் தீவிர முயற்சிகளுக்கு மத்திய மந்திரி சவுகான் தனது பாராட்டு தெரிவித்தார்.
இந்திய மாதுளை, மாம்பழம்
இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று, வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை எடுத்துரைத்த அவர், நியூசிலாந்தில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மற்றும் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் கல்வி பரிமாற்றங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சமாக இந்திய மாதுளை இறக்குமதிக்கும், மாம்பழ ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கும் நியூசிலாந்து தரப்பு ஒப்புக்கொண்டது.கூட்டத்தில் இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதர் பேட்ரிக் ராடா மற்றும் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல்வர் குறித்து அவதூறு: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து