பாரளுமன்ற தேர்தலில் பா.ஜனா கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைத்த உள்ளது. மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்று உள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 22 ந்தேதி அன்று தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 அன்று முடிவடைகிறது. 23-ந்தேதி மத்திய பட்ஜெட்டை 2024-25 பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
அனைத்துக் கட்சி கூட்டம்
இதற்கிடையே வருகிற 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ராஜீவ் ஆலோசனை நடத்த உள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் வருகிற 21 -ந் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதானக் குழு அறையில் நடைபெறுகிறது.
‘ஹல்வா’ விழா
இதற்கிடையே மத்தி பட்ஜெட் 2024-25 தயாரிப்பு இறுதி கட்டத்தை குறிக்கும் வகையில் பாரம்பரிய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சிஇன்று நடைபெற்றது. அல்வாவை மத்திய மந்திரி நிர்மலாசீதாராமன் தனது அமைச்சக ஊழியர்களுக்கு வழங்கினார். இதில் மத்திய மந்திரி பங்கஜ் சவுத்ரி மற்றும் பட்ஜெட்ட தயாரிப்பில் ஈடுபட்ட துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
நிர்மலா சீதாராமன் சாதனை
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு முன்பு , முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1959 மற்றும் 1964 &க்கு இடையில் நிதி அமைச்சராக இருந்த போது 5 பட்ஜெட்களையும் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் சமர்ப்பித்து உள்ளார். இந்த சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடிக்க உள்ளார்.
ஜூலை 23 ந்தேதி நாடாளுமன்றத்தில் மத்தியமந்திர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை முடித்த பிறகு மொபைல் போன்களில் “யூனியன் பட்ஜெட்” என்ற செயலியில் பட்ஜெட்டின் முழுவிபரம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பார்க்கலலாம்.