விழாவில்,மாநில இளைஞரணி செயலாளர் மணி,கம்பம் தொகுதி செயலாளர் அபுதாகிர்,நகரச் செயலாளர்கள் சுப்பிரமணி, அய்யர், இளைஞர் அணி துணைச் செயலாளர் அருண்குமார்,மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் லதா,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கிருஷ்ணவேணி,மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து மதுரை மீனாட்சி மிஷன் நமது மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 50 இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்.
உத்தமபாளையம் ,தேவாரம், , அனுமந்தன்பட்டி, உள்ளிட்ட இடங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் கிட் வழங்கப்பட்டது.
ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவச வேட்டி சேலை ,வழங்கப்பட்டது. சாலை விபத்தில் மரணம் அடைந்த வீரபுத்திரன் குடும்பத்தாருக்கு ரூ.1.லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து இலவச மரக் கன்றுகளும், 500க்கும் மேற்பட்டோருக்கு விதைப் பந்துகளும் வழங்கப்பட்டன.
பள்ளி மாணவ – மாணவியர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி பைகள்,ஏழை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 5 ஆயிரத்து மேற்பட்டோருக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.