பத்ம விருது விண்ணப்பங்களை செப். 15  வரை சமர்ப்பிக்கலாம்

Bharat Ratna Padma Bhushan Award
Spread the love

புதுடெல்லி:

2025 குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் 2025-க்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகளை சமர்ப்பிப்பது, 2024 மே 1 முதல் தொடங்கியுள்ளன. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கான கடைசி தேதி 15 செப்டம்பர் 2024 ஆகும் . பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் ராஷ்ட்ரிய புரஸ்கார் இணையதளத்தில் (https://awards.gov.in) ஆன்லைன் வாயிலாக மட்டுமே பெறப்படும் .

அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி.யை தாக்கிய விவகாரத்தில் மேலும் 6 பேர் கைது

பத்ம விருது

பத்ம விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகியவை நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளாகும். 1954 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற அனைத்து துறைகள் / துறைகளில் புகழ்பெற்ற மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு தகுதியானவர்கள். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பத்ம விருதுகளுக்கு தகுதியற்றவர்கள்.

3

பத்ம விருதுகளை, மக்களின் பத்ம விருதுகளாக மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, அனைத்து குடிமக்களும் சுய நியமனம் உட்பட நியமனங்கள்/பரிந்துரைகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மகளிர், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர், ஆதிதிராவிடர் & பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமுதாயத்திற்கு தன்னலமற்ற சேவை செய்து வருபவர்களின் சிறப்பான மற்றும் சாதனைகள், உண்மையிலேயே அங்கீகரிக்கப்பட வேண்டிய திறமை வாய்ந்த நபர்களைக் கண்டறிய ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.

இணையதளத்தில்

விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் மேலே கூறப்பட்ட இணையதளத்தில் கிடைக்கும் வடிவமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தொடர்புடைய விவரங்களையும் கொண்டிருக்க வேண்டும், இதில் கதை வடிவத்தில் மேற்கோள் (அதிகபட்சம் 800 வார்த்தைகள்) உட்பட, பரிந்துரைக்கப்பட்ட நபரின் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவையை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.

இது தொடர்பான விவரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://mha.gov.in) ‘விருதுகள் மற்றும் பதக்கங்கள்’ என்ற தலைப்பிலும், பத்ம விருதுகள் இணையதளத்திலும் (https://padmaawards.gov.in) உள்ளன. இவ்விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகள் இணையதளத்தில் https://padmaawards.gov.in/AboutAwards.aspx  என்ற இணைப்புடன் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய வனக் கொள்கை உருவாக்க 15 பேர் குழு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *