2. Annuity-க்கு 20 சதவிகிதம் போதும்.
முன்பு, என்.பி.எஸ் கணக்கில் ரூ.5 லட்சத்திற்கு மேல் வைத்திருக்கும் அரசு அல்லாத தேசிய சேமிப்பு திட்ட முதலீட்டாளர்கள், தங்களது வருடாந்திர தொகையை (Annuity) பெற குறைந்தது 40 சதவிகிதம் பயன்படுத்த வேண்டியதாக இருந்தது.
ஆனால், இப்போது குறைந்தது 20 சதவிகித தொகையை மட்டும் பயன்படுத்தினாலே போதும்.
உதாரணம்: கவிதா தனியார் நிறுவன ஊழியர். அவரது என்.பி.எஸ் கணக்கில் ரூ.10 லட்சம் வைத்திருக்கிறார். இப்போது அவரது திட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.
முன்பு, அவரால் 60 சதவிகித தொகையை (ரூ.6 லட்சம்) மட்டுமே லம்சம்மாக எடுக்க முடியும். மீதி 40 சதவிகிதத்தை வருடாந்திர தொகை பெறுவதற்கு பயன்படுத்த வேண்டும்.
இப்போது கவிதா குறைந்தது 20 சதவிகித வருடாந்திர தொகைக்கு (ரூ.2 லட்சம்) பயன்படுத்தினாலே போதுமானது.
அரசு தேசிய சேமிப்பு திட்ட முதலீட்டாளர்கள், இப்போதும் வருடாந்திர தொகைக்கு குறைந்தது 40 சதவிகிதத்தை பயன்படுத்த வேண்டும்.
* வருடாந்திர தொகை அல்லது Annuity – வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருமானம் பெற இன்சூரன்ஸ் கம்பெனிக்கு முதலீட்டாளர்கள் அளிக்கும் லம்சம் தொகை.