வெளிநாடுகளில் குடும்பத்தைப் பிரிந்து, இரவு பகலாக உழைத்துச் சம்பாதிக்கிறீர்கள். இன்று கை நிறையச் சம்பளம் வரலாம். ஆனால், ரிட்டயர்மென்ட் முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பும்போது, ஒவ்வொரு மாதமும் குடும்பச் செலவுக்கு என்ன செய்வீர்கள்? உங்கள் பேங்க் சேமிப்பு மட்டும் வாழ்நாள் முழுதும் போதுமா?
பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) செய்யும் மிகப் பெரிய தவறு, பணத்தை வெறும் சேமிப்போடு நிறுத்திவிடுவதுதான். அந்தப் பணத்தை எப்படி ஒரு “நிரந்தர மாதாந்திர வருமானமாக” (Monthly Pension) மாற்றுவது என்று திட்டமிடுவதில்லை.
உங்கள் ரிட்டயர்மென்ட் வாழ்க்கையைப் பணக்கவலையே இல்லாமல், சுதந்திரமாக வாழ வழிகாட்ட வருகிறது சனிக்கிழமை (ஏப்ரல் 11, 2026) நடக்கவிருக்கும் இந்தச் சிறப்பு ஆன்லைன் பயிலரங்கம்!

நிகழ்ச்சியின் பெயர்: ஓய்வுக்காலத்துக்குப் பின் ஈஸி பென்ஷன் – NRIs-க்கான நிதித் திட்டமிடல் பயிலரங்கம்
இந்தப் பயிலரங்கத்தில் நீங்கள் என்னென்ன கற்றுக்கொள்வீர்கள்?
ரிட்டயர்மென்ட் திட்டமிடல்: இது ஏன் மிக முக்கியம்? இதை இப்போதே எப்படித் தொடங்குவது?
உங்கள் பென்ஷன் கணக்கீடு: உங்கள் எதிர்கால வாழ்க்கை முறைக்கு, ஒவ்வொரு மாதமும் துல்லியமாக எவ்வளவு பென்ஷன் தேவை என்பதைக் கணக்கிடும் ரகசியம்.
முதலீடே வருமானமாக: நீங்கள் சிறுகச் சிறுகச் சேர்க்கும் முதலீடுகளைக் கொண்டே, எப்படி ஒரு நிரந்தர மாதாந்திர வருமானத்தை (Monthly Income) உருவாக்குவது?
தவிர்க்க வேண்டிய தவறுகள்: ரிட்டயர்மென்ட் திட்டமிடலில் பலரும் செய்யும் ஆபத்தான தவறுகள் என்னென்ன? அவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி?
யாரெல்லாம் இதில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்?
-
ஓய்வு பெறும் வயதை (Retirement age) நெருங்கிக் கொண்டிருக்கும் NRIs.
-
ரிட்டயர்மென்ட் வாழ்க்கையை முன்கூட்டியே திட்டமிட நினைக்கும் சம்பளதாரர்கள்.
-
வேலைக்குச் செல்லாவிட்டாலும், தொடர்ச்சியான மாதாந்திர வருமானத்தைத் தேடும் NRIs.
-
பாதுகாப்பான, யாரையும் சார்ந்து நிற்காத ரிட்டயர்மென்ட் வாழ்க்கையை விரும்பும் அனைவரும்.
நிகழ்ச்சி விவரங்கள்:
நாள்: ஏப்ரல் 11, 2026, சனிக்கிழமை
நேரம்: மதியம் 12.30 மணி (இந்திய நேரப்படி – IST)
இடம்: ஆன்லைன் (Zoom/Webinar)
“ஊர் திரும்பிய பின் என்ன செய்வது?” என்ற கவலையை இன்றோடு விடுங்கள். உங்களின் பல வருட உழைப்பு, உங்களுக்கான நிரந்தரப் பென்ஷனாக மாற வேண்டும். உங்கள் ரிட்டயர்மென்ட் வாழ்க்கையை ராஜா போல வாழ, உடனே இந்தப் பயிலரங்கத்தில் பதிவு செய்யுங்கள்!
முன்பதிவு செய்ய (100 இடங்கள் மட்டுமே!) – https://labham.money/events/webinar-apr11-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr11_2026