NRI Corner-6: முதலீட்டில் வெளிநாடு வாழ் தமிழர்கள் செய்யும் 3 முக்கியத் தவறுகள்! எப்படி சரிசெய்யலாம்? |NRI Corner-6: laabam article for NRI investment

Spread the love

3. பங்குச் சந்தையில் நேரடியாக ஈடுபடுவது…

வெளிநாடுகளில் பல்லாயிரம் தமிழர்கள் பங்குச் சந்தையில் டீமேட் கணக்கு தொடங்கி நேரடியாகப் பங்குகளை வாங்குகிறார்கள். அல்லது, அந்த டீமேட் கணக்கு மூலமே மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்கிறார்கள். இது அவர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைத் தந்தாலும், இந்த முறையின்மூலம் பலரும் எதிர்காலத்துக்குத் தேவையான செல்வத்தைப் பெருக்க பலராலும் முடிவதில்லை. முதலில், எந்தப் பங்கை வாங்க வேண்டும், எந்தப் பங்கை வாங்கக் கூடாது என்று தெரியாமல், ஏதோ ஒரு பங்கை வாங்கி நஷ்டப்படுகிறார்கள். இரண்டாவது, ஓரளவு லாபம் கிடைத்தாலும் அந்தப் பங்கை விற்று, லாபம் பார்க்கும் “டிரேடிங்’ மனோபாவத்துடன் தான் செயல்படுகிறார்களே தவிர, வாரன் பஃபெட் போல யாரும் நீண்ட காலத்துக்கு வைத்திருந்து, பெரும் செல்வத்தை சேர்ப்பதில்லை.

டீமேட் கணக்கு மூலம் டைரக்ட் ஃபண்டுகளை வாங்குபவர்களுக்கு ‘எக்ஸ்பென்ஸ் ரேஷியோ’ என்கிற வகையில் கொஞ்சம் பணம் மிச்சமாகலாம். ஆனால், எந்த ஃபண்டில் முதலீடு செய்வது என்று தெரியாமல், ஏதோ ஒரு ஃபண்டில் முதலீடு செய்வதன்மூலம் குறைந்த லாபமே கிடைக்கிறது. இதனைத் தவிர்க்க வேண்டுமெனில், ஒரு ஃபண்ட் ஆலோசகரின் வழிகாட்டுதலில் சரியான மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதுதான் எதிர்காலத்திற்குத் தேவையான பணத்தைப் பெருமளவில் சேர்க்க முடியும்.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இந்த மூன்று தவறையும் செய்யாமல் இருந்தாலே போதும், பெருமளவில் பணத்தை சேர்க்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *