வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஒரு விஷயத்தில் குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். NRE, NRO இந்த இரண்டு கணக்குகளுக்கு என்ன வித்தியாசம், எதற்கு எந்தக் கணக்கைப் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்கிற குழப்பம் தொடர்ந்து இருக்கவே செய்கிறது. அதற்கு சரியான பதிலை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

அவசியமான இரண்டு கணக்குகள்…
வெளிநாடுகளில் வேலை நிமித்தமாக வசிக்கும் இந்தியர்களைத்தான் NRI – Non Resident Indians என்று அழைக்கிறோம். இவர்கள் NRE & NRO என இரண்டு கணக்குகளை வைத்திருக்கலாம். இந்த இரண்டு கணக்குகளின் பயன்பாடு வித்தியாசமானவையாக இருந்தாலும், அவற்றின் அடிப்படை நோக்கம் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதே ஆகும்.

NRE கணக்கு என்பது…
முதலில் NRE (Non Resident External) கணக்கைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். இந்தக் கணக்கு வெளிநாட்டில் சம்பாதிக்கப்படும் வருமானத்தை இந்தியாவிற்கு அனுப்பி, சேமிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வைக்கப்படும் தொகையானது இந்திய ரூபாயாக மாற்றப்படும்.
NRE கணக்கின் முக்கியமான சிறப்பு என்னவெனில், இதில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு இந்தியாவில் வரி எதுவும் கட்டத் தேவை இல்லை. உதாரணமாக, நீங்கள் 50 லட்சம் ரூபாயை NRE கணக்கின் மூலம் எஃப்.டியில் வைத்திருந்தால், அதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு எந்த வரியும் கட்டத் தேவை இல்லை.
மேலும், இந்தக் கணக்கில் உள்ள முதன்மைத் தொகையும் வட்டியும் எந்த வரம்புமின்றி வெளிநாட்டிற்கு திரும்ப அனுப்பிக்கொள்ளலாம் (full repatriation).
எனவே, வெளிநாட்டு வருமானத்தைப் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் நிர்வகிக்க விரும்புவோருக்கு NRE மிகவும் மிகவும் ஏற்றதாகும்.
NRO கணக்கு என்பது…
அடுத்ததாக NRO கணக்கு பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். இந்த கணக்கு இந்தியாவில் இருந்து பெறப்படும் வருமானங்களை (உதாரணமாக, வீட்டு வாடகை, ஓய்வூதியம், வட்டி வருமானம் போன்றவை) சேமிக்கப் பயன்படுகிறது.
இந்த NRO கணக்கில் வெளிநாட்டிலிருந்து சம்பாதித்த பணத்தையும் வைத்துக்கொள்ளலாம். ஆனால், இந்தக் கணக்கை வைத்திருப்பதன் முக்கியமான நோக்கம், இந்தியாவில் சம்பாதிக்கிற வருமானத்தை முறையாக நிர்வாகம் செய்வதற்குத்தான்.
NRO கணக்கில் கிடைக்கும் வட்டிக்கு இந்தியாவில் வரி விதிக்கப்படும். உதாரணமாக, இந்தக் கணக்கு மூலம் ரூ.10 லட்சத்தை வங்கி எஃப்.டி ஒன்றில் வைத்திருந்து, அதற்கு ரூ.2 லட்சம் வட்டி வருமானமாகக் கிடைத்தால், இதற்கு உங்கள் வருமான வரம்பிற்கேற்ப வரி கட்ட வேண்டும்.
மேலும், இந்தக் கணக்கிலிருந்து வெளிநாட்டிற்குப் பணத்தை அனுப்புவதற்கு சில வரம்புகள் உள்ளன. பொதுவாக, ஒரு நிதியாண்டிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு (உதாரணமாக 1 மில்லியன் டாலர் வரை) மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, அதற்கும் தேவையான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
மேலும், இந்த NRO கணக்கை NRI ஒருவர் இந்தியாவில் வசிக்கும் ஒருவருடன் இணைந்து (joint account) தொடங்க முடியும்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய எந்தக் கணக்கு?
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு NRE மற்றும் NRO (Non-Resident Ordinary) கணக்குகளில் எதை பயன்படுத்துவது என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
உள்ளபடி பார்த்தால், இந்த இரு கணக்குகளின் மூலமாகவும் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்ய அனுமதி உண்டு. என்றாலும், இந்த இரண்டு கணக்கில் எது சரி என்பதைப் பார்த்து, அதை தேர்வு செய்வதன் மூலம் பிற்பாடு நடக்கும் சிக்கல்களை எளிதாகத் தவிர்க்க முடியும்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணுமா?
NRI முதலீட்டாளர்களே, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய உங்களுக்கு விருப்பமா? இது தொடர்பாக நீங்கள் வீடியோகாலில் நேருக்கு நேர் பேச விரும்புகிறீர்களா?
NRI Calendly – https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்த லிங்க்கை கிளிக் செய்து உங்களுக்கான நேரத்தை இப்போதே உறுதி செய்துகொள்ளுங்கள்!
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தொடர்பான சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் – https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o
இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான ‘லாபம்’-ஐத் தொர்புகொள்ளுங்கள் – மிஸ்டு கால்: 9600296001
குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.