அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 5&ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அதேபோல ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டார். ஆனால் கடந்த சில நாட்களாக நடந்த சம்பவம் வேட்பாளரை மாற்றம் செய்திருக்கிறது. இதனால் அதிபார் போட்டியில் கமலா ஹாரிஸ் தற்போது அதிபர் தேர்தலில் களம் இறங்கி உள்ளனர்.
கமலா ஹாரிஸ் வேட்டபாளர்
இந்நிலையில் இன்று அதிபர் வேட்பாளருக்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களில் தான் கையெழுத்து போட்டிருப்பதாக கமலா ஹாரிஸ் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலின் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் மாறியிருக்கிறார்.
கருத்து கணிப்புகளில் டிரம்புக்கும், கமலா ஹாரிஸ்க்கும் இடையேயான வெற்றி வித்தியாசம் ஒரு சதவீதம் மட்டுமே உள்ளது. இதனால் அதிபர் தேர்தல் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை உலக நாடுகளும் ஆர்வமுடன் உற்று நோக்கி வருகின்றன.
ஒபாமா ஆதரவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்-க்கு முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வார தொடக்கத்தில், மிச்செலும் (மனைவி) நானும் எங்கள் நண்பரை கமலா ஹாரிஸை தொடர்பு கொண்டு பேசினோம்.
அவர் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார் என்றும், அவருக்கு எங்கள் முழு ஆதரவு இருப்பதாகவும் நாங்கள் அவளிடம் கூறினோம். நம் நாட்டிற்கு இந்த முக்கியமான தருணத்தில், நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் அவர் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறோம். நீங்கள் எங்களுடன் இணைவீர்கள் என்று நம்புகிறோம்“ என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின் ஒருபகுதியாக தற்போதைய அதிபரும், அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளவரும் நேரடி விவாதங்களில் பங்கேற்பது வழக்கம். இந்த விவாதங்கள் பல கட்டங்களாக நடைபெறும்.
அதிபர் தேர்தலில் இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இனிவரும் விவாதங்களில் கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே விவாதம் நடைபெறும். இது பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விவாதம்அமெரிக்க மக்களின் எண்ண ஓட்டத்தை மாற்றும் என்பதால் கடும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
கத்திப்பாரா பாலத்தில் குதித்து தற்கொலை செய்தவர் கிரிக்கெட் வீரர்