ஒலிம்பிக் போட்டிகள் வருகிற 26&ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11&ந்தேதி வரை பிரான்ஸில் உள்ள பாரிஸில் நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக 5 வீரர்கள்
அதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஷ் ரமேஷ், சந்தோஷ் தமிழரசன், பிரவின் சித்திரவேல், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோர் தடகள அணியில் இடம்பிடித்துள்ளனர். நீளம் தாண்டுதலில் ஜஸ்வின் அல்ட்ரின் இந்திய தடகள அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடியுடன் சந்திப்பு
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று(4-ந்தேதி) டில்லியில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் குழுவுடன் கலந்துரையாடினார். அவர்கள் அனைவருக்கும் மோடி வாழ்துக்கள் தெரிவித்தார்.
இதுதொடர்பாகபிரதமர்மோடி தனது சமூக வலைதளபக்கத்தில் கூறியிருப்பதாவது:&
ஒலிம்பிக்போட்டியில் பங்கேற்க பாரீசுக்கு செல்லும் நமது வீரர்களுடன் கலந்துரையாடினேன். நமது விளையாட்டு வீரர்கள் திறமையை வெளிப்படுத்தி இந்தியாவை பெருமைப்படுத்துவார்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.
அவர்களின் வாழ்க்கைப் பயணங்களும் வெற்றிகளும் 140 கோடி இந்தியர்களுக்கு நம்பிக்கையைத் தரும் என்று குறிப்பிட்டு உள்ளார்.