Oneplus pad 3 | ஒன்பிளஸ் நிறுவனத்தின் Pad 3 விரைவில் அறிமுகம்.. விலை நிலவரம் என்ன.. முழு விவரம் இதோ! | தொழில்நுட்பம்

Spread the love

Last Updated:

Oneplus pad 3 | ஒன்பிளஸ் நிறுவனத்தின் Pad 3 விற்பனை இந்தியாவில் வரும் செப்டம்பரில் தொடங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒன் ப்ளஸ்
ஒன் ப்ளஸ்

இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் Pad 3 அறிமுகம் குறித்த விவரங்கள் சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. வெளியாகி இருக்கும் தகவல்களின்படி இந்தியாவில் புதிய OnePlus Pad 3 டேப்லெட்டை வாங்க மக்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

முன்னதாக OnePlus Pad 3 கடந்த மாதம் அமெரிக்காவில் அறிமுகமானது. இது இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய கூடுதல் தகவல்கள் எங்களிடம் உள்ளன. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய  பேட் மாடல் ஃபிளாக்ஷிப் ஹார்ட்வேர்-ஆல் இயக்கப்படுகிறது. மேலும் இது பிரீமியம் டிசைன் மற்றும் டேப்லெட்டுகளுக்காக கஸ்டமைஸ்ட் பிளாட்ஃபார்மை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் Pad 3 இந்திய விற்பனை எப்போது மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை என்ன.?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் Pad 3 விற்பனை இந்தியாவில் வரும் செப்டம்பரில் தொடங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் Pad 3-ன் சரியான விற்பனை தேதியையோ அல்லது இந்தியாவில் OnePlus Pad 3-க்கான விலையையோ இன்னும் அதிகாரபூர்வமாக பகிர்ந்து கொள்ளவில்லை, இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் Pad 3 டேப்லெட்டானது 12GB + 256GB மற்றும் 16GB + 512GB வேரியன்ட்ஸ்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் பேஸ் மாடல் Pad 3-ன் அமெரிக்க விலையான $699.99 (தோராயமாக ரூ.56,500)-ஐ பார்த்தால், இந்தியாவில் OnePlus Pad 3 விலை சுமார் ரூ.55,000-ல் தொடங்க கூடும்.

Pad 3 டேப்லெட்டின் ஸ்பெசிஃபிகேஷன்கள்:

இது டால்பி விஷன் சப்போர்ட் உடன் 13.2-இன்ச் 3.4K LCD டிஸ்ப்ளே, 900 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 144Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது, இதன் மூலம் பிரீமியம் டேப்லெட் செக்மென்ட்டில் வலுவான தயாரிப்பாக இது அமைகிறது. இதில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஃபிளாக்ஷிப் ப்ராசஸரை கொண்டு இயங்கும் முதல் ஒன்பிளஸ் டேப்லெட்டாக Pad 3 உள்ளது.

இந்த ப்ராசஸர் 16GB ரேம் மற்றும் 512GB UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜூடன் இணைக்கப்ட்டுள்ளது. இது உலகளாவிய சந்தைகளுக்கான ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15 பதிப்பில் இயங்குகிறது மற்றும் வெப்ப மேலாண்மைக்காக 34,857 சதுர மிமீ கூலிங் சிஸ்டமுடன் வருகிறது. இந்த டேப்லெட்டின் பின்புறத்தில் 13MP கேமராவும், தெளிவான செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 8MP ஃப்ரன்ட் கேமராவும் உள்ளன. மேலும், இது 12,140mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட்  சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனம், பேட் 3 ஆனது iOS syncing-ஐ எனேபிள் செய்யும் என்றும், யூஸர்கள் ஆப்பிள் சாதனங்களுடன் இணைக்கவும், கிராஸ்-பிளாட்ஃபார்ம் இணக்கத்தன்மையை விரிவுப்படுத்தவும் உதவும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *