அது செயல்படுற கண்டிஷனிலும் இருந்தாகணும். அது இங்க கிடையாது. இலங்கையில அப்படியான ரயில் ஒண்ணு இருந்தது. அதனால அங்க போய் படப்பிடிப்பை நடத்தினோம்.
பிறகு, அந்த ரயிலுக்குள்ள சில ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கவேண்டியது இருந்தது. அதை டாமேஜ் செய்திடக்கூடாதுனு இங்கு முழுமையாக அந்த ரயிலை செட் போட்டோம்.
அந்தக் காட்சி படத்திலயும் முக்கியமான ஒன்றாக இருக்கும். முக்கியமாக, அந்த செட் அமைக்கிறதுக்கு நாங்க 6 மாதங்கள் கிட்ட வேலை செஞ்சோம்.

உண்மையான நீராவி இன்ஜீன் கொண்ட ரயிலை அளவெடுத்து, அதனுடைய உருவாக்கத்திற்குப் பின்னாலுள்ள திட்டங்களையும் கேட்டறிந்து வந்து இங்கு செட் அமைத்தோம்.
அந்த செட்டைப் பார்த்துட்டு சுதா கொங்கரா மேம் ‘நான் இலங்கையில இருக்கேனா? இல்ல, நம்ம செட்ல இருக்கேனா?! அப்படியே அசலாக இருக்கு’னு பாராட்டு தெரிவிச்சாங்க.
அதை என்னுடைய உழைப்புக்கு கிடைச்ச அங்கீகாரமாகப் பார்க்கிறேன். அதுபோல எஸ்.கே சாரும், ரவி மோகன் சாரும் ‘அங்கிருந்த ரயிலை இங்க எடுத்துட்டு வந்தீங்களா’னு ஆச்சரியப்பட்டுக் கேட்டாங்க.
இது மாதிரி பல உழைப்புகள் இந்தப் படத்துல நிறைஞ்சிருக்கு.” என்றார் மகிழ்ச்சியுடன்.