Parasakthi: 'பராசக்தி' ரிலீஸ் எப்போது? – அப்டேட் தந்த இயக்குநர்

Spread the love

சுதா கொங்கரா இயக்கியிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் ரிலீஸாகத் திரைக்கு வருகிறது.

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் அவர் இசையமைக்கும் 100-வது படம்.

பராசக்தி படத்தில்...
பராசக்தி படத்தில்…

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பயணிக்கும் களத்தை மையமாக வைத்துக் கண்காட்சி ஒன்றை மக்கள் பார்வைக்காகத் தயார் செய்திருக்கிறார்கள்.

அது மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்று இங்கு வருகை தந்திருந்த இயக்குநர் சுதா கொங்கரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

சுதா கொங்கரா, “கண்காட்சிக்கு வருபவர்களுக்கு செவர்லே வின்டேஜ் கார் ரொம்பவே பிடிச்சிருக்கு.

இன்னைக்கு இருப்பவர்களுக்கு 1960 காலகட்டத்தைத் தெரியாது. படத்துல இருக்கிற விஷயங்களை இங்கக் கொண்டு வந்து வச்சிருக்கோம். நாங்க ரொம்பவே ரசிச்சு செய்த உலகத்தை மக்களுக்குக் காட்டணும்னுதான் இந்தக் கண்காட்சியை அமைச்சிருக்கோம்.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது. ரிலீஸ் தேதியைத் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அறிவிப்பாங்க.” என்றவர், “ஆண், பெண் என்பதெல்லாம் போயிடுச்சு. இயக்குநர், அவ்வளவுதான்

Sudha Kongara
Sudha Kongara

நான் பெரிய படங்கள் செய்றேன். எனக்கு முன்பே 200 கோடி படமெல்லாம் எடுத்திருக்காங்க. எங்களை இயக்குநர்கள் என்றே அழைப்பது வந்துடுச்சு. வரலைன்னா, அதை நோக்கி நாம போகணும்.

25 வருஷங்களுக்கு முன்னாடி நான் ஒரு பெரிய ஹீரோவுக்கு கதை சொல்லணும்னு முயற்சி செய்யும்போது, இவங்க சிக் ஃப்ளிக்ஸ்தான் செய்வாங்கனு சொன்னாங்க.

ஆனா, இன்னைக்கு அனைத்து சினிமாக்களின் பெரிய ஹீரோகளிடமிருந்தும் எனக்கு வாய்ப்பு வருது. அப்போதிருந்த விஷயங்கள் இப்போது உடைஞ்சிருச்சு. அதுதான் சாதனை!” எனக் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *