நம்மிடையே பேசிய ப்ரித்வி பாண்டியராஜ், “நான் சுதா கொங்கரா மேமின் பெரிய ரசிகன். அவருடைய ‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’ படங்களெல்லாம் எனக்கு அவ்வளவு ஃபேவரிட். அவங்களோட டைரக்ஷன்ல நடிக்கிற ஆசை, இப்போ நடந்திருக்கு.
முதல்ல, இந்தப் படத்துல சூர்யா சார் நடிக்கிறதாக இருந்தபோதே நான் ஆடிஷன் கொடுத்திருந்தேன். பிறகு எந்தவொரு ரிப்ளையும் அங்கிருந்து சொல்லல.
பிறகு, ‘ப்ளூ ஸ்டார்’ ரிலீஸுக்குப் பிறகு எனக்கு விஷ் பண்ணினாங்க! சிவா சார் படத்துக்குள்ள வந்ததுக்குப் பிறகு எனக்கு மறுபடியும் கால் வந்தது.
அங்கிருந்துதான் ‘பராசக்தி’ படத்திற்கான பயணம் தொடங்குச்சு. என்னுடைய கதாபாத்திரம், எஸ்.கே சார்கூடவே ட்ராவல் செய்யும்.

புரட்சிகளைச் செய்யும் என்னுடைய கேரக்டர் வசனங்களை டிரெய்லர்ல பார்த்துட்டு நிறைய பாராட்டுகள் கொடுக்கத் தொடங்கிட்டாங்க.” என்றவர், “‘பராசக்தி’ படத்தின் களமே ரொம்ப புதிதானது. ஏன்னா, 80ஸ் பற்றிய படங்கள்ல, பீரியட் உணர்வை திரையில முழுமையாகக் கொண்டு வர ஒப்பனை, உடைகள்னு பணிகள் செய்வாங்க.
ஆனா, 60-கள்ல பெல்பாட்டம் பேண்ட்கூட கிடையாது. என்னுடைய தோற்றமும் சுதா மேமுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அதே சமயம், நான் ஒப்பனை துளியும் செய்துவிடக் கூடாதுனு சுதா மேம் சொல்லிட்டாங்க. மீசையும் மெல்லியதாக வச்சிருந்தேன்.
இப்படியான லுக்ல இருக்கும்போது, நான் தனுஷ் – விக்னேஷ் ராஜா படத்துல நடிச்சிட்டிருந்தேன். ரெண்டு பக்கங்களிலும் என்னுடைய தோற்றத்தைக் கவனிப்பது என்பது கொஞ்சம் சவாலாகத்தான் இருந்துச்சு.” என்றார்.