Patriot: "நீண்ட நாட்களுக்குப் பிறகு நாங்கள் சேர்ந்து நடித்ததற்கான காரணம்?!" – மம்மூட்டி

Spread the love

18 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருக்கும் ‘பேட்ரியாட்’ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தை ‘சீ யூ சூன்’, ‘மாலிக்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

Mammootty - Mohanlal
Mammootty – Mohanlal

படத்தின் ரிலீஸையொட்டி ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ ஊடகத்தின் இந்திய பதிப்பிற்குப் பேட்டியளித்திருக்கிறார் மம்மூட்டி.

இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லாலுடன் சேர்ந்து நடித்த அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

மம்மூட்டி, ” நானும் மோகன்லாலும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிக்கிறோம். ஆனால், ‘பேட்ரியாட்’ திரைப்படம் நட்சத்திர அந்தஸ்தை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் கிடையாது.

நாங்கள் இருவரும் வெறும் இரண்டு கதாபாத்திரமாகவே நடிக்கிறோம். இத்திரைப்படம், அதன் கன்டென்ட்டை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் பல எக்ஸ்பீரிமென்ட் விஷயங்களோடு, கமர்ஷியல் விஷயங்களையும் முயற்சி செய்திருக்கிறோம். அதனால்தான் நாங்கள் இணைந்து நடித்திருக்கிறோம். நாங்கள் இருவரும் இந்தப் படத்தில் நண்பர்களாகவே நடித்திருக்கிறோம்.

Kalamkaval - Mammootty
Kalamkaval – Mammootty

ஆனால், அந்தக் கதாபாத்திரங்கள் புதியதாக இருக்கும். எங்களைத் தாண்டி அழுத்தமான பெண் கதாபாத்திரங்களும் இத்திரைப்படத்தில் இருக்கின்றன. இத்திரைப்படம் ஒரு பார்முலாவைப் பின்பற்றியது கிடையாது.

ஆனால், இப்படம் புதிதாக ஒரு பார்முலாவை உருவாக்கும். அப்படியான திரைப்படம் இது. 130 நாட்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தை ஷூட் செய்தோம்.

இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில், என்னை மோகன்லாலின் மேலாளர்தான் கவனித்துக்கொண்டார். ஏனென்றால், என்னுடைய மேலாளர் மோகன்லாலை கவனித்துக் கொண்டிருந்தார்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *