நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் எஞ்சியுள்ள 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கான நெடுஞ்சாலைகளை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
நதின் கட்கரி
இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
இந்த பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளதாக கூறிய அவர், நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டுகளில் சாலை கட்டுமானங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். தற்போது நடந்து வரும் திட்டப் பணிகளில் ஏற்பட்டுள்ள தடைகளைக் களையும் பொறி முறைகளை மேம்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.
அதிவேக மாதிரி முறை
நாட்டில் நெடுஞ்சாலைகளை அமைப்பதில் வேகத்தை அதிகரிக்க அதிவேக மாதிரி முறையை பின்பற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.