பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை மனு பாக்கர் வென்று உள்ளார்.
பிரதமர் மோடி பாராட்டு
ஒலிம்பிக் போட்டியில் பதக்கவேட்டையை அவர் தொடங்கி வைத்து உள்ளார். மனுபாக்கருக்கு பிரதமர்மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மனு பாக்கருக்கு வாழ்த்துகள்.
அபாரமான சாதனை
வெண்கலம் வென்றதற்குப் பாராட்டுகள். இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை மனுபாக்கர் பெற்றுள்ளார். அபாரமான சாதனை!.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.