PMIST: `ஆயிரம் கனவுகளின் விமானம்’ – இந்தியா, ஆசியா புத்தக சாதனை நிகழ்வு! | periyar maniyammai college record event

Spread the love

முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட திரு. டி. கே. சுந்தரமூர்த்தி, ஓய்வு பெற்ற விஞ்ஞானி. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), பெங்களுரு தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று உரையாற்றினார் வாழ்க்கையை ரசித்தபடியே எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும் என்றும், அறிவை சேமிப்பது எதிர்காலத்திற்கான முதலீடு போன்றது என்றும் விளக்கினார். சந்திரனில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்ட இந்தியாவின் சந்திரயான் திட்டத்திள் பெருமையை எடுத்துரைத்த அவர், மாணவர்கள் ISRO வில் சேர்ந்து நாட்டின் முன்னேற்றத்தில் பங்களிக்க வேண்டும் ஊக்கமளித்தார்.

IIT திருப்பதி – தொழில்நுட்ப புதுமை மையம் (TIH)-இன் டாக்டர் அபிஜித் தேவானந்தம், நிறுவனம் புதுமை மற்றும் நடைமுறை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அளிக்கும் ஆதரவினை பாராட்டினார். மாணவர்கள் தங்களுக்கென ட்ரோன்களை உருவாக்க வேண்டும் என்றும், புதுமையான யோசனைகளுடன் திட்டங்களை முன்னெடுக்க மாணவர்களுக்கு தொழில் முனைவோராக வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

செயற்குழு உறுப்பினர் முனைவர் வீ. அன்புராஜ் கிளைடர் பறப்பைத் தொடங்கி வைத்தார். மேலும், 2019 ஏப்ரல் 21 அன்று PMIST-இல் 15 பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட ” NSLV மணியம்மையார் செயற்கைக்கோள்” மூலம் பெற்ற ஆசியா புத்தக சாதனையை நினைவுகூர்ந்தார். விண்வெளி பொறியாளர்களுக்கு வானமே எல்லை அல்ல என்றும், சரியான கட்டமைப்பு இருந்தால் எதையும் பறக்கச் செய்ய முடியும் என்றும் கூறி மாணவர்களை ஊக்குவித்தார். தொடர்ந்து, முதன்மை விருந்தினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, இந்தியா மற்றும் ஆசியா புத்தக சாதனை நிறுவனத்தின் தீர்ப்பாளரான திரு. எஸ். சகாயராஜ், சாதனை அறிவிப்பை வெளியிட்டார். ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான கைமுறை கிளைடர்கள் பறக்கவிடப்பட்ட சாதனையாக, 1932 மாணவர்கள் 966 கிளைடர்களை பறக்கவிட்ட சாதனைக்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுனவம் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றதாக அறிவித்தார். இந்த சாதனை, இந்தியா மற்றும் ஆசியா புத்தக சாதனை நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுனவத்தின், விண்வெளி பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் ஐ. கார்த்திக் சுப்ரமணியன் அவர்களின் நன்றியுரை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆரா ஏரோஸ்பேஸ் மதுரை நிறுவனத்தால் FPV மற்றும் வேளாண் ட்ரோன் காட்சிகள், மேலும் RC ட்ரோன் பந்தயங்கள் நடத்தப்பட்டன.

“ஆயிரம் கனவுகளின் விமானம்” நிகழ்ச்சி, மாணவர்கள் பெரிய கனவுகளை காணவும், தைரியமாக புதுமைகளை முயற்சிக்கவும், விண்வெளித் துறையில் உள்ள பரந்த வாய்ப்புகளை ஆராயவும் ஊக்கமளித்தது இந்நிகழ்வு, எதிர்கால பொறியாளர்கள் மற்றும் புதுமையாளர்களை உருவாக்கும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுனவத்தின், நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக இணை துணைவேந்தர் ஆர்.மல்லிகா, பதிவாளர் பேரா பி.கே.ஸ்ரீவித்யா பேராசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *