Police reunite 70-year-old woman who begged on Mumbai streets for 12 years with her sons | 12 ஆண்டு மும்பை தெருக்களில் தெருக்களில் பிச்சைஎடுத்த 70 வயது பெண்ணைமகன்களுடன் சேர்ந்துவைத்த போலீஸார்

Spread the love

மும்பையில் ஏராளமானோர் யாசகம் பெற்று வாழ்கின்றனர். அவர்களில் பலர் தங்களது குடும்பத்தை விட்டு பிரிந்தவர்களாகவோ அல்லது உறவுகள் அற்றவர்களாகவோ இருக்கின்றனர். அவ்வாறு மும்பையில் யாசகம் பெறுபவர்களை மீட்டு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மும்பை பைகுலாவில் உள்ள ஜெ.ஜெ.மார்க் சந்திப்பில் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் சரியாக உடைகூட அணியாமல் பசியுடன் யாசகம் எடுத்துக்கொண்டிருந்தார். அவரை போலீஸார் அழைத்து சென்று குளிக்க வைத்து வேறு ஆடை கொடுத்து சாப்பாடு வாங்கி கொடுத்தனர்.

அப்பெண் தனது நினைவுகளை இழந்திருந்தார். அவரது உறவினர்கள் அல்லது சொந்த ஊர் குறித்து எதுவும் அவருக்கு நினைவில் இல்லை. கோதாவரி என்ற பெயர் மட்டும் அவருக்கு நினைவில் இருந்தது. அவரைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் அவரை செம்பூரில் உள்ள முகாமில் சேர்த்தனர். அங்கு இருந்தவர்கள் அப்பெண்ணிற்கு கவுன்சிலிங் கொடுத்தனர். இதில் அப்பெண் ஷெலு என்ற ஒரு வார்த்தையை மட்டும் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். ஷெலு என்பது மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி அருகில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

குடும்பத்தோடு சேர்த்து வைத்தபோலீஸார்

குடும்பத்தோடு சேர்த்து வைத்தபோலீஸார்

மும்பை போலீஸார் உடனே ஷெலு போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அதோடு அப்பெண்ணின் புகைப்படத்தையும் அப்போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஷெலு போலீஸார் 12 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களை ஆய்வு செய்து வைசாலி என்ற பெண் காணாமல் போனதாக புகார் பதிவாகி இருப்பதை உறுதி செய்தனர். ஷெலு போலீஸார் உடனே புகார் கொடுத்தவர்களை தொடர்பு கொண்டு வரவழைத்தனர். அவர்கள் வந்து அப்பெண்ணின் புகைப்படத்தை பார்த்து அது அவர்களின் தாயார் என்பதை உறுதி செய்தனர். வைசாலி 12 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை வந்தபோது வழி தவறி சென்றுள்ளார்.

அதன் பிறகு அவரால் தனது சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. தனது தாயார் இருக்கிறார் என்று தெரிந்தவுடன் அவரது இளைய மகன் கிஷோர் தனது தாயாருக்காக எடுத்து வைத்திருந்த சேலை மற்றும் உணவு எடுத்துக்கொண்டு மும்பைக்கு வந்தார். வைசாலிக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் பெரியவர்களாகிவிட்டனர். போலீஸார் வைசாலியை அவரது மகன்களோடு சேர்த்து வைத்தபோது அவர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர். இச்சந்திப்பு உணர்ச்சிப்பூர்வமாக அமைந்தது. அப்பெண்ணை அவரது மகன்களுடன் சேர்த்து வைத்த போலீஸாரை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *