Pregnancy Test-ல் ஆணுக்கு பாசிட்டிவ்….இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா? | Is it possible for a pregnancy test to show a positive result for a man?

Spread the love

இந்த விஷயத்துக்குள் போவதற்கு முன், “ஹோம் பிரெக்னன்சி கிட்’ (Home pregnancy test kit ) எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். ஹெச்சிஜி (Human chorionic gonadotropin) என்ற ஹார்மோனை, சிறுநீரில் கண்டுபிடிப்பதுதான் பிரெக்னன்சி டெஸ்ட்.

பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஹார்மோனானது பிளாசன்ட்டா (Placenta) எனப்படும் நஞ்சுக்கொடியில் இருந்து உற்பத்தியாகிறது. கரு பதிந்ததும், பிளாசன்ட்டாவில் இருந்து ஹெச்சிஜி என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது. அதனால்தான் பிரெக்னன்சி டெஸ்ட் பாசிட்டிவ் என்று வருகிறது. ஆனால், நம் உடலானது கர்ப்பத்தின்போது மட்டுமன்றி, வேறு சில சூழல்களிலும் இந்த ஹார்மோனை உற்பத்தி செய்யலாம்.

உதாரணத்துக்கு, ஆணுக்கு விந்துப்பையில் புற்றுநோய் (Testicular cancer) பாதிக்கப்பட்டிருந்தால், இந்த ஹார்மோன் சுரக்கலாம். இதை ‘ஜெர்ம் செல் டியூமர்ஸ்’ (Germ cell tumors ) என்று சொல்வோம். இது ரத்தத்தில் நுழைவதால், சிறுநீரில் கலந்து பிரெக்னன்சி டெஸ்ட்டில் பாசிட்டிவ் என்று காட்டும்.

ஆணுக்கு  விந்துப்பையில் புற்றுநோய் (Testicular cancer) பாதிக்கப்பட்டிருந்தால்,  இந்த ஹார்மோன் சுரக்கலாம்.

ஆணுக்கு விந்துப்பையில் புற்றுநோய் (Testicular cancer) பாதிக்கப்பட்டிருந்தால், இந்த ஹார்மோன் சுரக்கலாம்.
freepik

இந்த வகைப் புற்றுநோய் செல்களும், ஆரம்பநிலை பிளாசென்ட்டல் செல்களைப் போல ஹெச்சிஜி ஹார்மோனை உற்பத்தி செய்யும். அதற்காக இந்த மாதிரி பிரெக்னன்சி டெஸ்ட் செய்து பார்த்துவிட்டு, அந்த ரிசல்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு, ஓர் ஆணுக்கு புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடிக்கவோ, உறுதிசெய்யவோ முடியுமா என்றால், நிச்சயம் முடியாது.

பிரெக்னன்சி டெஸ்ட்டை, புற்றுநோயைக் கண்டுபிடிப்பதற்கான டெஸ்ட்டாக ஒருபோதும் நினைக்கவேகூடாது. டெஸ்டிகுலர் கேன்சரில் எல்லாமே இதுபோல ஹெச்சிஜியை உற்பத்தி செய்யாது. எனவே, ஒருவேளை புற்றுநோய் இருந்தும், பிரெக்னன்சி டெஸ்ட் கிட்டில் இந்த ஹார்மோன் இருப்பது தெரியவராமல் இருந்தால், மிகப்பெரிய ஆபத்து அலட்சியப்படுத்தப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *