குடியரசுத் தலைவர் 25 ,26-ந்தேதி சத்தீஸ்கர் பயணம்

Dinamani2fimport2f20232f82f202foriginal2fdroupadi Murmu Independance Day Speech Edi.jpg
Spread the love
சத்தீஸ்கர்:

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2024 அக்டோபர் 25-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை சத்தீஸ்கரில் பயணம் மேற்கொள்கிறார்.

அக்டோபர் 25-ம் தேதி ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் 2-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்முகலந்து கொள்கிறார். பின்னர், ராய்ப்பூரில் உள்ள என்.ஐ.டி.யின் 14-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அவர், நயா ராய்ப்பூரில் உள்ள புர்கௌதி முக்தாங்கனுக்கும் செல்கிறார்.

பட்டமளிப்பு விழா

அக்டோபர் 26-ம் தேதி பிலாய் ஐஐடியின் நான்காவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்கிறார்.

ராய்ப்பூரில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு சுகாதார அறிவியல் மற்றும் சத்தீஸ்கர் ஆயுஷ் பல்கலைக்கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *