ஜனாதிபதி நாளை ஒடிசா பயணம்

Droupadi Murmu
Spread the love

ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை(ஜூலை 6-ந்தேதி)முதல் 9-ந்தேதி வரை ஒடிசாவில் பயணம் மேற்கொள்கிறார்.
நாளை புவனேஸ்வரில், உத்கல்மணி பண்டிட் கோபபந்து 96-வது நினைவுதின நிகழ்ச்சியில், குடியரசுத்தலைவர் பங்கேற்பார்.

உதயகிரி குகை

Droupadi Murmu Official Portrait, 2022

ஜூலை 7-ந்தேதி அன்று பூரியில் பகவான் ஜகந்நாதரின் தேர்த் திருவிழாவில் பங்கேற்கிறார். இதனைத்தொடர்ந்து 8-ந்தேதி அன்று உதயகிரி குகைகளைப் பார்வையிடும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பிபூதி கனுங்கோ கலை, கைத்தொழில் கல்லூரி, உத்கல் கலாச்சாரப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர்களுடன் உரையாடுகிறார்.
அதே நாளில், புவனேஸ்வர் அருகே உள்ள ஹரிடமட கிராமத்தில் பிரம்மகுமாரிகளின் தெய்வீக தியான மையத்தை அவர் திறந்து வைத்து, நீடித்த சுற்றுச் சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கத்தையும் தொடங்கி வைக்க உள்ளார்.

பட்டமளிப்பு விழா

பின்னர் 9-ந்தேதி அன்று புவனேஸ்வரில், தேசிய அறிவியல் கல்வி, ஆராய்ச்சிக்கான நிறுவனத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொள்ள உள்ளார்.

இதையொட்டி விழா, மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

நாட்டுக்கு மிகப் பெரிய மீட்பு தேவை-இங்கிலாந்து பிரதமர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *