ஒலிம்பிக்போட்டிக்கு சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன்தான்- மோடி

1
Spread the love

புதுடெல்லி:
பாரீசில் நடந்த ஒலிம்பிக்போட்டியில் இந்தி வீரர்கள் ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 6பதக்கங்கள் பெற்றனர். இன்று (15ந்தேதி) நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஒலிம்பிக்போட்டியில் பக்கம் வென்ற வீரர்கள் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து ஒலிம்பிக்போட்டியில் கலந்து கொண்ட வீரர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

3

ஆக.,24, 25ல் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: நிகழ்ச்சி முழு விபரம்

ஒவ்வொரு வீரரும்

அப்போது வீரர்களிடம் போட்டியின் அனுபவம் குறித்து கேட்டார். மேலும்வி¬ளாயாட்டு துறையில் அவர்களது சாதனையை பாராட்டினார். பின்னர் பிரதமர் மோடி பேசும்போது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன்தான் என்றார்.
இது தொடர்பாக மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.விளையாட்டுகளில் அவர்களது அனுபவங்களை கேட்டறிந்தேன்.

விளையாட்டு கட்டமைப்பு

4

விளையாட்டு துறையில் அவர்களது சாதனையை பாராட்டினேன். பாரீசுக்கு சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன்தான்.அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளிக்கும்.உயர் தர விளையாட்டு கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் என்று தெரிவித்து உள்ளார்.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாணவிகள் உள்பட 3 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *