வயநாடு:
வயநாடு இடைத்தேர்தலிலும் ஐக்கிய முன்னணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக தோ்தலில் முதன்முறையாக பிரியங்கா காந்தி களமிறங்கியிருக்கிறார்.
இடது ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோகேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் 1987 முதல் 2001 வரை நந்தபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்தவர். 2014 மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷாநவாஸிடம் போட்டியிட்டு 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
கடந்த தேர்தலில் வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரைவிட ராகுல் காந்தி 3.64 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வயநாடு தொகுதிக்கு பாஜக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
கேரளத்தில் பாலக்காடு, செலக்கரா ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவ. 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.