புதுடெல்லி:
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி என 2தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டு இரு தொகுதிகளிலுமே வெற்றிபெற்றார்.
இதைத்தொடர்ந்து அவர், வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி வயநாடு எம்.பி.பதவியை ராஜினாமா செய்தபோதே அந்த தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தமது தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி முதல் முறையாக நேரடியாக தேர்தல் களத்தை சந்திக்க இருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்து உள்ளனர்.