PSLV-C62 தோல்வி: 15 செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவிற்கு பின்னடைவு|PSLV-C62 Vanishes in Space, ISRO Investigates Failure

Spread the love

இன்று காலை PSLV-C62 ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO).

ஆனால், இந்த வெற்றி நீடிக்கவில்லை.

ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது PSLV-C62 ஏவுகணை.

இந்த ஏவுகணை மொத்தம் 15 செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்றது. இதில் 14, வெளிநாடுகளின் துணைச் செயற்கைக்கோள்கள் ஆகும்.

இதுவரை 63 வெற்றிகரமாக பயணங்களை முடித்துள்ள இந்த ஏவுகணையின் 64-வது பயணம் இது. ஆனால், இந்தப் பயணம் தோல்வியில் முடிந்துள்ளது.

விண்ணில் பாய்ந்த PSLV-C62 ஏவுகணை விண்வெளியிலேயே காணாமல் போயிருக்கிறது.

இது குறித்து இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

“PSLV-C62 திட்டம் தனது மூன்றாவது ஸ்டேஜின் (PS3) இறுதியில் பிரச்னையைச் சந்தித்துள்ளது. இது குறித்த ஆய்வைத் தற்போது ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர்”. எனத் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *