சில இடங்களில் அரசியல் விவாதங்களில் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய்த் தகவல்கள், மக்களிடம் பிரிவினையைத் தூண்டும் கருத்துகள் போன்றவையும் இதில் அடங்கும்.
2024-ல் ஆக்ஸ்போர்ட் அகராதி முடிவில்லாமல் ஸ்க்ரோல் செய்வதால் ஏற்படும் மனச்சோர்வைக் குறிக்கும் “பிரெயின் ரோட்” (Brain Rot) அதாவது மூளை அழுகல் என்ற வார்த்தையைத் தேர்வு செய்திருந்தது.
இந்த Brain Rot, Rage Bait ஆகிய இரண்டு வார்த்தைகள் குறித்து ஆக்ஸ்போர்ட் அகராதியின் தலைவர் காஸ்பர் கிராத்வோல், “ஒருவர் அதிகம் ஸ்க்ரோல் செய்கிறார் என்றால் அவருக்குக் கோபப்படும்படியான கண்டென்ட்கள் அதிகம் காண்பிக்கப்படும். அதனால் அதிக ஈடுபாட்டுடன், கோபப்பட்டு கமெண்ட், லைக் எனக் கொடுத்துக்கொண்டிருப்பார்.
அதை அல்காரிதம் மேலும் அதிகரிக்கும். அதனால் அவர் தொடர்ச்சியாக ஸ்க்ரோல் செய்துகொண்டிருப்பார். அதன் காரணமாக மனம் சோர்வடையும். இந்த இரண்டு வார்த்தைகளும் ஒருவரின் சமூக ஊடகப் பயன்பாட்டின் மாபெரும் சுழற்சியைக் குறிக்கும் வார்த்தைகள். இந்த வார்த்தைகள் வெறும் டிரெண்ட் மட்டுமல்ல – டிஜிட்டல் தளங்கள் நம் சிந்தனையையும் நடத்தையையும் எப்படி மாற்றுகின்றன என்பதைக் காட்டுகின்றன” என்கிறார்.