7 ஆண்டுகளில் 84 ஆயிரம் குழந்தைகளை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை

Logo Of Rpf
Spread the love

ரெயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) ‘நன்ஹே பரிஸ்டே’ (சிறு தேவதைகள்) என்ற மீட்பு நடவடிக்கைத் திட்டத்தை கடந்த 7 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. இது பல்வேறு இந்திய ரெயில்வே மண்டலங்களில் பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகளை மீட்பதற்கான ஒரு பணியாகும்.

84 ஆயிரம் குழந்தைகள்

Rpf 01

கடந்த 7 ஆண்டுகளில், ரெயில் நிலையங்களலும் ரெயில்களிலும் ஆபத்தில் இருந்த 84 ஆயிரத்து 119 குழந்தைகளை ரயில்வேப் பாதுகாப்புப் படை மீட்டுள்ளது.

‘நன்ஹே ஃபரிஸ்டே’ என்பது ஒரு மீட்பு நடவடிக்கை மட்டுமல்ல. ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இது ஒரு உயிர்நாடியான செயல்பாடாக உள்ளது. 2018-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு அண்மைக் காலம் வரையிலான தரவு கிடைத்துள்ளது.

அர்ப்பணிப்பு

இது ரயில்வே பாதுகாப்புப் படையில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை விளக்குகிறது. ஒவ்வொரு மீட்பு நடவடிக்கையுமே சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பவர்களைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக 2020-ம் ஆண்டு சவாலாக இருந்தது. இது இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்தது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், ஆர்பிஎப் அந்த ஆண்டில் 5,011 குழந்தைகளை மீட்டது.

Rpf

குழந்தைகள் நலக் குழு

ரெயில்வே 135 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்களை அமைத்துள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையினரால் (ஆர்பிஎப்) ஒரு குழந்தை மீட்கப்படும்போது, அவர்கள் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். அவர்கள் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள்.

நடிகர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த ரம்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *