டிட்வா புயல் வட தமிழக கடற்கரையோர பகுதியில் கடலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் சிகப்பு மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
சென்னையிலிருந்து 220 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலால் நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிறது மழை. இன்றும் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
Ditwah புயல் இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Deep Depression) குறைய வாய்ப்புள்ளது. எனினும் புதுச்சேரி மாநிலத்துக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
வட தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, அரியலூர் மாவட்டங்களுக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
முன்னதாக திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புயல் தமிழகத்தைத் தாண்டி தெற்கு ஆந்திரப் பிரதேசத்துக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
நாளை (நவ. 1) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நிலையற்ற வானிலை நிலவுவதால் இதில் மாற்றங்கள் ஏற்படலாம்.