“Rajapalayam to Sivakasi..”; What is the reason for Rajendra Balaji’s change of constituency-”ராஜபாளையம் டு சிவகாசி..”; ராஜேந்திர பாலாஜி தொகுதி மாறிய காரணம் என்ன

Spread the love

2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்து சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.கவின் முகமாக ராஜேந்திர பாலாஜி மாறிய நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டார். தி.மு.க வேட்பாளராக தங்கப்பாண்டியன் போட்டியிட்டார். தங்கப்பாண்டியன் 74,158 வாக்குகளும், ராஜேந்திர பாலாஜி 70,260 வாக்குகளும் பெற்றனர். இதில், ராஜேந்திர பாலாஜி, 3,078 வாக்குகள் வித்யாசத்தில் தோல்வி அடைந்தார்.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, அ.தி.மு.க முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணனுடன் மோதல் ஏற்பட்டது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ராதாகிருஷ்ணன் செயல்பட தொடங்கினார். அவர் சார்ந்த விஸ்வகர்மா சமூக வாக்குகளை ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக திருப்பினார். ஒரு கட்டத்தில் ராஜேந்திர பாலாஜியை தோற்கடிக்க வேண்டும் என்ற இலக்குடன் ராதாகிருஷ்ணன் செயல்பட தொடங்கினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *