திமுக எம்.பி கனிமொழி:
தமிழ்த் திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்பவரும், 50 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அன்பைப் பெற்றவரும், எப்போதும் தனது எளிமையால் அதிர வைக்கும் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்:
75 வருடங்கள் சிறப்பான நினைவுகூறத்தக்க வாழ்க்கை.
50 வருட சினிமா புகழ்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் நண்பா ரஜினிகாந்த்.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்:
தனது வெற்றிகரமான திரையுலக பயணத்தோடு,தூய ஆன்மீக பயணத்தையும் அரவணைத்து, உலகளவில் மூன்று தலைமுறை ரசிகர்களின் மனதைக் கவர்ந்த உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…. பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்…