Rajinikanth : 'தூரமா நின்னு கைக்கொடுப்பாருன்னு நினைச்சேன், ஆனா…' – நெகிழும் பத்மா!

Spread the love

தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்து பாராட்டுகளைப் பெற்ற தூய்மைப் பணியாளரை பத்மா நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் அழைத்துப் பேசி பரிசு வழங்கி கௌரவித்திருக்கிறார்.

குடும்பத்தினருடன் பத்மா
குடும்பத்தினருடன் பத்மா

ரஜினிகாந்தை பார்த்த மகிழ்ச்சி விலகாமல் இருந்த பத்மாவை தொடர்புகொண்டு பேசினேன். ‘எங்கிட்ட போன் கிடையாது. என் வீட்டுக்காரர் மட்டும்தான் போன் வச்சிருக்காரு. ரஜினி சார் சைடுல இருந்து நேத்து கூப்பிட்டு விஷயத்தை சொல்லியிருக்காங்க.

சாயங்காலம் வீட்டுக்கு வந்த உடனேயே ‘தலைவர் உன்னைய பார்த்து பாராட்டணும்னு சொல்றாராம். நாளைக்கு போறோம்’னு சொன்னவுடனேயே பயங்கர சந்தோஷமாகிடுச்சு. நைட்டெல்லாம் தூக்கமே வரல. நாம படிக்காதவங்க, அவரை பார்த்து எப்படி கௌரவமா பேசுறதுன்னு ஒரே குழப்பம். அத்தோடதான் குடும்பமா காலையில கிளம்பி போயஸ்கார்டன் போனோம்.

பத்மா
பத்மா

சும்மா பாராட்டுவாரு, தூரமா நின்னு கைக்கொடுப்பாருன்னு நினைச்சேன். ஆனா, போன உடனேயே என்னையை அரவணைச்சு தோள்ல தட்டிக் கொடுத்து பாராட்டுனாரு. அதுலயே நெகிழ்ந்துட்டேன். ‘நீங்க செஞ்சது ஒரு சேவை. எல்லாரும் உங்களை மாதிரியே நல்ல மனசோட இருக்கணும். இந்தப் புண்ணியம்லாம் உங்க பேரப் புள்ளைங்களுக்கு பெரிய சந்தோஷமா திரும்ப கிடைக்கும்’னு மனப்பூர்வமா வாழ்த்துனாரு. ரெண்டு பேத்திகளையும் கட்டிப்பிடிச்சு கொஞ்சி போட்டோ எடுத்துக்கிட்டாரு. என் வீட்டுக்காரரும் அவங்க அண்ணனும் அவரோட தீவிர ரசிகருங்க. அவங்க கிட்டயும் உட்காந்து பேசுனாரு. ‘நீங்கெல்லாம் முன்னுதாரணமானவங்க’னு சொல்லி ஒரு செயினையும் பரிசா கொடுத்தாரு. அவரோட எவ்வளவோ படங்களை பார்த்து ரசிச்சிருக்கோம். அவரே கூப்பிட்டு பாராட்டுறதுலாம் நடக்கும்னு என்னைக்கும் நினைச்சதில்ல. அது நடந்ததுல ரொம்ப சந்தோஷம்’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *