அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

Rajnathsing
Spread the love

அமெரிக்கா:
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று(23ந்தேதி)வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனை சந்தித்தார்.

ஆலோசனை

Gvtm8dhasaaxub0

அப்போது அவர்கள் புவிசார் அரசியல் நிலைமை, முக்கிய பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்தும் ஆலோசித்தனர்.

டில்லி திரும்பினார் பிரதமர் மோடி

மேலும் வாஷிங்டனில், அமெரிக்க இந்திய உத்திசார் ஒத்துழைப்பு மன்றம் ஏற்பாடு செய்திருந்த வட்ட மேஜை மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்புத் தொழில்துறையின் மூத்த பிரதிநிதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துரையாடினார். இந்த வட்டமேஜை மாநாட்டில் ஏராளமான அமெரிக்க பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்டன.

Gvtm8dixoaaw2ck

நெருக்கமாகப் பணியாற்ற

இதில் ராஜ்நாத் சிங் பேசும்போது, அமெரிக்க முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பை இந்தியா வரவேற்கிறது. திறமையான மனித வளம், வலுவான அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவான சூழல் அமைப்பு, பெரிய உள்நாட்டு சந்தை ஆகியவை இந்தியாவில் உள்ளன. வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய திறன், நீடித்த தொழில்நுட்பம் ஆகியவற்றில் அமெரிக்காவுடன் நெருக்கமாகப் பணியாற்ற இந்தியா விரும்புகிறது என்று கூறினார். பின்னர் ராஜ்நாத் சிங், அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.

முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் நேரில் சென்று தொடங்கி வைக்காதது ஏன்?- தமிழிசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *