“மனிதன் பாதி மிருகம் பாதி’ என்பதுபோல ‘கார் பாதி பைக் பாதி’ சேர்ந்து செய்த கலவை ஒன்று உள்ளது.
அதன் பெயர் அனேகமாக உங்களுக்கே தெரிந்திருக்கும். அதன் பெயர் ராப்டீ HV.
HV எனும் எழுத்துக்கு High-Voltage என அர்த்தம். இது ஒரு எலெக்ட்ரிக் பைக்தான்.
ஆனால், சாதாரணன எலெக்ட்ரிக் பைக் அல்ல. 7 ஆண்டுகள் கருவில் (R&D) வளர்ந்து சாலையை அலங்கரிக்க வந்திருக்கும் இதுதான் CCS2 தொழில்நுட்பம் கொண்ட முதல் பைக்.
அதாவது எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்யும் அதே தொழில்நுட்பத்தில் இந்த பைக்கையும் சார்ஜ் செய்துகொள்ளலாம்.

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி ராப்டீ நிறுவனம் T30 எனும் தனது முதல் பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்தது. கருவில் மட்டுமே இருந்த ஒன்றை உலகுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு அது.
இதைப் பற்றி ராப்டீ நிறுவனத்தின் CEO தினேஷ் அர்ஜுனிடம் பேசினோம், “எங்கள் 7 ஆண்டுக்கால உழைப்பை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
நிறுவனம் தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்திலேயே பல வாடிக்கையாளர்கள் எங்கள் தயாரிப்பின்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர்களுக்கு நன்றி கூறும் நாள் இது. விரைவில் இந்தியா முழுவதும் உள்ள சாலைகளை அலங்கரிக்கும்” என்றார்.