2016-ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் வெளியான ‘க்ரிக் பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
கன்னட திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், தொடர்ந்து பாலிவுட் வரை சென்றிருக்கிறது.
சமீபத்தில் இவரது நடிப்பில் “The Girlfriend’ படம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ ஊடகத்திற்கு ராஷ்மிகா பேட்டி அளித்திருக்கிறார்.
“இந்த வருடம் எனக்கு சிறப்பான வருடமாக இருக்கிறது. என்னுடைய ஐந்து படங்கள் இந்த வருடம் வெளியாகி இருக்கின்றன.
சில படங்கள் திட்டமிட்டு நடந்தன. சில படங்கள் யதார்த்தமாக அமைந்தன. அந்த அனைத்து படங்களும் எனக்கு முக்கியமான படங்கள் தான்.
என் கரியரின் தொடக்கத்தில் இந்த மாதிரியான படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று என்னை நான் சுருக்கிக்கொள்ளவில்லை.