மேலும் சிலரிடம் ஆசிர்வதிக்கப்பட்டது என்று கூறி புளிக்கொட்டைகளை அதிக விலை கொடுத்து வாங்க வைத்துள்ளார். வாடிக்கையாளர்களின் நிதிநிலையை நன்கு தெரிந்து கொண்டு அதற்கு தக்கபடி வெறும் ரூ.100 மதிப்புள்ள பொருட்களை ரூ.10 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கு வாங்கும்படி செய்துவிடுவார். அவர் தனது வாடிக்கையாளர்களிடம் தெய்வீக குணப்படுத்தும் சக்தி இருப்பதாகக் கூறி போலி ரத்தினக் கற்களை வாங்கும்படி கூறி ஏமாற்றினார்.
150 முறை வெளிநாட்டு பயணம்
பொதுமக்களிடம் மோசடியாக சம்பாதித்த பணத்தில் அசோக் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். தென்கொரியாவிற்கு தனது குடும்பத்தோடு சென்ற வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. மொத்தம் 150 முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்து இருக்கிறார்”என்று தெரிவித்தனர்.
அசோக் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழு இஷானேஷ்வர் மகாதேவ் கோயிலின் அறக்கட்டளையுடன் தொடர்புள்ளதைக் கண்டறிந்து அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறது. நாசிக் அருகில் உள்ள மிர்கானில் இருக்கும் மகாதேவ் கோயிலை நடத்தும் அறக்கட்டளை தலைவராக அசோக் இருக்கிறார்.
அசோக்கிற்கு சொந்தமாக பண்ணை வீடும், பங்களாவும் இருக்கிறது. அவர் மகாராஷ்டிரா முழுவதும் 50க்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அசோக்கிற்கு மகாராஷ்டிரா பெண்கள் கமிஷன் தலைவர் ரூபாலியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து ரூபாலி பெண்கள் கமிஷன் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.