டி20 உலககோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு ஏதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன் குவித்தது. ரோகித்சர்மா 92 ரன்குவித்தார்.
ஹார்த்திக் பாண்ட்யா 27 ரன்
வீராட்கோலி டக் அவுட் ஆனார்.ரிஷப் பண்ட் 15 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்னும், ஷிவம் டூபே 28 ரன்னும்,ஹார்த்திக் பாண்ட்யா 27 ரன்னும், ரவீந்திர ஜடோஜா 9 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களில் ஸ்டார்க், ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.ஹசல்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடியது.
பழிதீர்த்த இந்தியா
டிராவிஸ் ஹெட் மட்டும் மிரட்டினார். அவர் 43 பந்துகளில்76ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. வார்னர் 6 ரன்னிலும், மிச்சல் மார்ஷ் 37 ரன்னிலும் மேக்ஸ்வெல் 20 ரன்னிலும் ஸ்டோனிஸ் 2 ரன்னிலும்,டிம் டேவிட் 15 ரன்னிலும் ,வேட் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங் 3 விக்கட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், பும்ரா,அக் ஷர் பட்டேல் தலா ஒருவிக்கட்டும் வீழ்த்தினர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை, மற்றும் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் அணி உலக சாம்பியன் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை தோற்கடித்து இருந்தது. இதற்கு தற்போது இந்தியா அணி பழி தீர்த்து உள்ளது.இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா அணி அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்துடன் மோதுகிறது.
இதையும் படியுங்கள்:குலதெய்வ வழிபாட்டுக்கு தடையா? கவர்னர் மாளிகை விளக்கம்