Renault Duster is Back: திரும்ப வந்துடுச்சுனு சொல்லுங்க! பழசு மாதிரி இல்லை; புது காரில் நிறைய அதகளம் இருக்கு! | Renault Duster is Back, what is new in it?

Spread the love

உள்ளே…

உள்ளே 48 கலர்களில் லைட்டிங் செட் செய்து கொள்ளலாம். 6 Way அட்ஜஸ்ட் கொண்ட எலெக்ட்ரிக் பவர்டு டிரைவர் சீட், முன் பக்கம் இரண்டும் வென்ட்டிலேட்டட் சீட்கள், லெதர் அப்ஹோல்சரி -. சீட்களுக்கு மட்டுமில்லை; டேஷ்போர்டு மற்றும் டோர் பேனல்களுக்கும்தான்! 

3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் பிரமாதமாக இருக்கிறது. அகலமான சென்டர் கன்சோல், டூயல் ஸ்க்ரீன் செட்அப்பில் டிரைவருக்கு 10.25 இன்ச் டிஸ்ப்ளே, நடுவே 10.1 இன்ச் ப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன்  சாஃப்ட் டச் மெட்டீரியர்கள், ஏர்வென்ட்கள் என்று உள்ளேயும் ரக்கட்தான்! கியர்பாக்ஸ் ப்ரீமியமாக இருக்கிறது.

சில கார்களில் பிசிக்கல் பட்டன்கள் இருக்காது. டஸ்ட்டரில் டிஜிட்டல் மற்றும் பிசிக்கல் பட்டன்கள் என்று இரண்டுக்குமே வாய்ப்பு இருக்கிறது. முன் பக்க ஆர்ம்ரெஸ்ட், கொஞ்சம் ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட்டாகவும் பயன்படுவது ப்ளஸ். 

முன்பு டஸ்ட்டர் வாங்கிய ஒரு நண்பரிடம், இன்னொரு நண்பர், ‛‛அதைப் போய் ஏன்யா வாங்கின? வாட்டர் பாட்டில் வைக்கக்கூட இடம் இருக்காது’’ என்று நக்கல் செய்தார். அது ஓரளவு உண்மைதான்; ஆனால் புது டஸ்ட்டரில் அப்படி இல்லை. நிறைய ஹோல்டர்கள், இடவசதி என்று கலக்குகிறது. இப்போது ஒயர்லெஸ் போன் சார்ஜர், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் வேறு! 

பாதுகாப்பைப் பொருத்தவரை டஸ்ட்டர் இப்போது சூப்பர்! 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார்கள், டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம், லெவல் 2 அடாஸ், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், நான்கு வீல்களுக்கும்  டிஸ்க் பிரேக்குகள் என்று பின்னி எடுக்கிறான் டஸ்ட்டர் பயபுள்ள! ரெனோ கார்களில் முதல் அடாஸ் தொழில்நுட்பம் கொண்ட கார் டஸ்ட்டர்தான். 5 ஸ்டார் ரேட்டிங்கும் க்ராஷ் டெஸ்ட்டிங்கில் வாங்கப் போவதாகச் சொல்கிறது ரெனோ. 

தாராளமான பூட் ஸ்பேஸ்

தாராளமான பூட் ஸ்பேஸ்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *