இது ஏன் தற்போது ட்ரெண்ட் ஆகிறது?
இன்றைய உலகம் `எப்போதும் புத்திசாலியாக இரு, எப்போதும் உழைத்துக்கொண்டே இரு’ என்று அழுத்தம் கொடுக்கிறது. இந்த அழுத்தத்தைத் தாங்க முடியாத சிலர், “நான் ஏன் புத்திசாலியாக இருக்க வேண்டும்? நான் முட்டாளாகவே இருந்துவிட்டுப் போகிறேன்” என்ற முடிவுக்கு வருகிறார்கள். இது ஒரு வகை மன அமைதிக்கான தப்பித்தல் (Escapism).
நீங்கள் புத்திசாலி என்று பெயர் எடுத்துவிட்டால், சமூகம் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கும். ஆனால், நீங்கள் ஒரு முட்டாள் (Retard) என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டால், யாரும் உங்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். இந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கவே சிலர் இந்த மனநிலையைக் கையில் எடுக்கிறார்கள்.
இது நல்லதா? கெட்டதா?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இதை ஒரு தற்காப்பு கலையாகவே பார்க்கிறார்கள். அதிக எதிர்பார்ப்புகளிலிருந்து தப்பிக்கவும், மன அமைதியைத் தேடவும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் கையில் எடுத்திருக்கும் ஒரு விசித்திரமான ஆயுதம் இது. உலகம் Smart ஆக மாறிக்கொண்டிருக்கும் போது, இந்த இளசுகள் மட்டும் `நான் ஒரு டியூப்லைட்!’ என்று விரும்பி மாறுவதுதான் காலத்தின் மிகப்பெரிய நகைச்சுவை முரண்.
இதில் பயன்படுத்தப்படும் Retard என்கிற வார்த்தை ஒரு மாற்றுத்திறனாளி சமூகத்தை இழிவுபடுத்துவது போல் இருப்பதாகப் பலரிடமிருந்து விமர்சனங்களும் எழுந்துள்ளன. இருப்பினும், இணையவாசிகள் இதை நகைச்சுவையான டோனிலேயே பயன்படுத்துகிறார்கள்.
இணையத்தில் இது ஜாலியாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் (வேலையிலோ, படிப்பிலோ) தொடர்ந்து இப்படி Retardmaxxing செய்வது, உங்கள் நற்பெயரையும், வளர்ச்சியையும் நிரந்தரமாகப் பாதித்துவிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.